
ஏலக்காய் (Cardamom) என்பது “மசாலாக்களின் ராணி” என அழைக்கப்படும் விலை உயர்ந்த ஒரு மசாலாக்கள் வகை ஆகும். இது பெரும்பாலும் மலையகம் மற்றும் ஈரநிலத்தையுடைய காடுகளான இடங்களில் வளர்க்கப்படுகிறது. இடுக்கி மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் ஏலக்காய் சாகுபடி பரவலாக நடைபெறுகிறது. நல்ல ஈரப்பதம், கொஞ்சம் நிழலுடன் கூடிய சூழல் மற்றும் சரியான காலநிலை இருந்தால் ஏலக்காய் நன்கு வளரும். சாகுபடியின் ஆரம்ப கட்டத்தில் அதிக கவனம் தேவைப்படும் இந்த பயிர், நன்கு பராமரிப்பு செய்தால் பல்லாண்டுகள் வரைக்கும் நல்ல வருமானம் தரும். மேலும், ஏலக்காயின் தானியங்கள் வியாபார ரீதியாகவும், மருத்துவப் பயன்களுக்காகவும் அதிகம் தேவைப்படுகிறது.
இடுக்கியில் பெய்துவரும் கனமழையால் ஏலக்காய் தோட்டங்களுக்கு பெரும் சேதம்
இடுக்கி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வண்டமேடு , கட்டப்பனை , நெடுங்கண்டம் குமுளி போன்ற பகுதிகளில் உள்ள எனக்காய் தோட்டங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழையால் தோட்டங்களில் நீர் தேங்கி நிற்பதால், வேர் அழுகல் மற்றும் பூஞ்சை நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன.
இடுக்கியில் கனமழை மற்றும் கடும் காற்றால் ஏலக்காய் தோட்டங்களுக்கு பெரிய சேதம்
இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் கனமழையுடன் கூடிய கடும் காற்று காரணமாக, ஏலக்காய் சாகுபடி பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஏராளமான ஏலக்காய் செடிகள் வேரோடு சாய்ந்துள்ளது மற்றும் செடிகள் பகுதியாக ஒடிந்து விழுந்துள்ளது. சில பகுதிகளில் சுழற்றி வீசும் காற்றால் தோட்டங்களில் உள்ள பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.இதனால் தோட்டங்களில் உள்ள செடிகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது.
இடுக்கியில் கடும் மழை மற்றும் காற்றால் ஏற்படும் பேரழிவு – ஏலக்காய் தோட்டங்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை துன்பத்திற்குள் தள்ளிய நிலை
இந்தக் கடுமையான நிலைமை தொழிலாளர்களின் வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது. ஏலக்காய் சாகுபடிக்கு தேவையான கூலி தொழிலாளிகள் பலர் வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். நாளும் வேலை செய்து தினசரி வருமானத்தில் வாழும் அவர்கள், இப்போது சாதாரண குடும்பச் செலவுகளுக்கே சிரமம் அடைந்து வருகிறார்கள். பிள்ளைகளின் கல்விச் செலவுகள், மருத்துவ செலவுகள் போன்றவை கட்டுப்படுத்த முடியாமல் தினமும் மன அழுத்தத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழை மற்றும் காற்றால் மட்டும் இல்லாமல், அதிக ஈரப்பதம் காரணமாக தோட்டங்களில் பூஞ்சை நோய்கள் பரவிவருகின்றன, இது ஏலக்காய் மகசூலையும், அதன் தரத்தையும் பாதிக்கிறது. இதனால், ஏற்கனவே சந்தை விலை குறைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு வருமானமே கிடைக்காமல் போயுள்ளது.
எடுக்கி டைம்ஸ் காலநிலவரப்படி, தற்போதைய காலநிலையில் பெரிதும் பாதிப்பை யேற்படுத்துவது காற்றுதான் என விவசாயியால் கவலை தெரிவித்துள்ளார்கள்.